Wednesday, January 28, 2015

மௌனம் மௌனம் ஆறறிவுள்ள மனிதனால் மாத்திரம் கடைபிடிக்கப்படும் ஒரு செய்கையாகும் இதனால் மனக்கட்டுப்பாடு ஒர் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.அதே நேரத்தில் மௌனம் கடைப்பிடிக்கப்படும் சந்தர்ப்பங்களைப்பொருத்து மௌனத்தின் பெறுமதியை நாம் விளங்கிக்கொள்ளலாம். கீழே சில உதாரணங்களைத் தருகிறேன் இன்பமான நேரங்களில் மௌனம் சம்மதம் நட்பில் மௌனம் நம்பிக்கை காதலில் மௌனம் சித்தரவதை வெற்றியில் மௌனம் அடக்கம் தேல்வியில் மௌனம் பெறுமை திட்டும்போது மௌனம் திட்டுபவரை பைத்தியமாக்குவது விருப்பமானவர் பிரியும் போது மௌனம் துக்கம் விருப்பமானவர் வெற்றிபெறும் போது மௌனம் மகிழ்ச்சி நாக்கின் கற்பு- மௌனம் இப்படியாக மௌனத்தை விளக்கிக்கொண்டுபோகலாம் எனவே மௌனத்தின் வலிமையை எப்படிப்பட்டது என்று அறியலாம் மௌனம் மிகச் சிறந்த பதில்தான், மென்மையான மொழிதான், பலராலும் திமிராகவே கணிக்கப்படுகிறது !!!!!!